அடுத்தடுத்து 18 நாய்கள் உயிரிழப்பு.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

அடுத்தடுத்து 18 நாய்கள் உயிரிழப்பு.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

Update: 2022-01-21 19:23 GMT

திருச்சியில் அடுத்தடுத்து 18 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் காலனியில் நேற்றிரவு 8 மணி அளவில் நாய்கள் ஒவ்வொன்றாக தெருவில் சுருண்டு விழுந்ததாகவும், சிறிது நேரத்தில் அவை ரத்த வாந்தி எடுத்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சில சமூகவிரோதிகள் கோழிக் கழிவுகளில் குருணை மருந்து கலந்து வைத்த காரணத்தால் 16க்கும் மேற்பட்ட தெரு நாய்களும், வீட்டில் வளர்த்த இரண்டு நாய்களும் இறந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விஷம் வைத்து உயிரிழந்த நாயின் எச்சங்களை தின்ற பல காகங்களும் இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த செயலால் இங்கு வாழும் மக்களிடத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியும், காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News