சென்னையில் 181 கட்டுப்பாட்டு பகுதிகள்.. வெளியில் யாரும் வர அனுமதி இல்லை !!

சென்னையில் 181 கட்டுப்பாட்டு பகுதிகள்.. வெளியில் யாரும் வர அனுமதி இல்லை !!

Update: 2021-05-18 17:06 GMT

கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதி கிடையாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 34 ஆயிரத்தை நெருங்கியது. இந்த சூழலில் ஊரடங்கு நடைமுறை அமலில் உள்ளதால் கொரோனா தொற்றின் வேகமும் பாதிப்பும் கடந்த ஒரிரு நாட்களாக குறைந்து வருகிறது. இது சிறிது ஆறுதலாக விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொறுத்தவரை சென்னை தான் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதும் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் சென்னையில் தப்பூசி போடும் பணி, கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 181 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இங்கு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணித்தும் வரும் நிலையில் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

Tags:    

Similar News