உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில். காணாமல் போன பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில், கரும்புத் தோட்டத்தில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பெண்தான் எனத் தெரியவந்தது. செருப்புகள் மற்றும் ஆடையைக் கொண்டு அப்பெண்ணின் தந்தை சடலத்தை அடையாளம் காட்டினார்.

கொலைக்கு முன்னர் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அடையாளத்தை மறைக்க உடலில் ஆசிட் ஊற்றப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க சந்தோஷ் வர்மா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: