கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!!
கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!!
கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவிவிட்டது.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 430ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 43 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 41 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 34 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 31 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 22 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 130 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில ் கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எர்ணாகுளத்தில் 11 பேருக்கும் திருவனந்தபுரத்தில் 6 பேருக்கும் புதிதாக ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
திருச்சூர் மற்றும் கண்ணூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
newstm.in