19 ஆண்டு கனவு நனவானது.. புதிய அவதாரம் குறித்து நடிகர் ஜெய் நெகிழ்ச்சி !!

19 ஆண்டு கனவு நனவானது.. புதிய அவதாரம் குறித்து நடிகர் ஜெய் நெகிழ்ச்சி !!

Update: 2021-09-21 18:06 GMT

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஜெய். இவர் விரையில் சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.

நடிகர் விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் ஜெய் நடத்தார். ஆனால் அதன்பின்னரும் அவருக்கு பெரியளவில் வெளிச்சம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தில் ரகு என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அது அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்து வந்த சுப்பிரமணியபுரம் ஜெயை தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக காட்டியது.

அதன்பின்னர், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என அடுத்தடுத்து வெற்றிபடங்களை கொடுத்தார். தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இசையமைப்பாளர் என்ற அவதாரத்தை அவர் எடுத்தள்ளார்.

இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஆவார். இந்நிலையில், சிவசிவா என்ற திரைப்படத்திற்கு  ஜெய் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் முதல் ஜெய் இசையமைப்பில் காடமுட்ட என்ற முதல்  சிங்கில் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

'சிவ சிவா' படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளது குறித்து நடிகர் ஜெய் பேசும் போது, 'ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

'சிவ சிவா' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பால சரவணன், காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை Lendi Studio சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். 

Full View

newstm.in

Tags:    

Similar News