"197 பேரை காணவில்லை" மத்திய அமைச்சர் அமித்ஷா அதிர்ச்சி தகவல் !
"197 பேரை காணவில்லை" மத்திய அமைச்சர் அமித்ஷா அதிர்ச்சி தகவல் !
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கில், 197 பேரை காணவில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆற்றின் கரையோரம் அமைந்து இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 18 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ள நீர் அதிகரித்ததால் நதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட புள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது மாறி வருகிறது என்றும் நிலைமை மோசமாக உள்ளதால் தொடர்ந்து மத்திய அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இதனிடையே, வெள்ளப்பெருக்கில் இன்று மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.