2 இட்லி 100 ரூபாய்.. தமிழகத்தின் இந்த ஊரில் தான்..!

2 இட்லி 100 ரூபாய்.. தமிழகத்தின் இந்த ஊரில் தான்..!

Update: 2022-04-13 18:37 GMT

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு செயல்படும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, விமான பயணிகள் தரப்பில் கூறியதாவது: ‘கோவை விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

ஒரு 'செட்' இட்லி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோவையில் செயல்படும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் இரண்டு இட்லி விலையுடன் ஒப்பிடுகையில், இது 60 சதவீதம் அதிகமாகும்.

இப்போதுள்ள காலகட்டத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் விமான பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், இந்த அளவு விலைக்கு விற்பனை செய்தால் எவ்வாறு வாங்கி சாப்பிட முடியும்..? அனைவருக்கும் ஏற்ப நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர்கள் தெரிவித்தனர்.

விலை உயர்வு குறித்து உணவக உரிமையாளர்களிடம் கேட்டால், ‘மிக அதிக வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால் இந்தளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது’ எனக் கூறுகின்றனர்.

Similar News