மூச்சை திணறடித்து 2 குழந்தைகள் கொலை.. சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை..!

மூச்சை திணறடித்து 2 குழந்தைகள் கொலை.. சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை..!

Update: 2022-02-04 12:45 GMT

தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்ற சிறுவனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின், இண்டியானா போலீஸ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ். இவரது தந்தைக்கு இரண்டாவது திருமணம் மூலம் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதில், 2 வயதான பெண் குழந்தை 2017-ம் ஆண்டு  மே மாதம் வீட்டில் மூச்சுத் திணறி இறந்து கிடந்தது. அதன்பின்னர், 2017-ம் ஆண்டு  ஜூலை மாதம், பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் மூச்சுத் திணறிய நிலையில் இறந்தது.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சகோதரன் நிக்கலஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 13 வயது.


மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ் குற்றவாளி என நிரூபணம் ஆனது. இதையடுத்து, 17 வயது சிறுவனான நிக்கலசுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar News