பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!!

பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!!

Update: 2022-01-04 08:15 GMT

பெற்றோருடன் நேரம் செலவிட அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிட விடுமுறை அளிக்கும் இந்த முடிவுக்கு கடந்த நவம்பர் மாதம் ஒப்புதல் கிடைத்திருந்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகள் சிறப்பு விடுமுறை. இதனை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார்.

இது தொட்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோருடனும், வீட்டில் உள்ள பெரியவர்களுடனும் தங்களது நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து 8 மற்றும் 9ஆம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள். எனவே அரசு ஊழியர்கள் வீட்டு பெரியவர்களுடன் கூடுதலாக நேரம் செலவிடலாம் என்று அசாம் மாநில பொது நிர்வாகத் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News