+2 தேர்வு...11 மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை!! பெற்றோர் அதிர்ச்சி!!

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மொழி பாட கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வு எழுத வரவில்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 820 மாணவர்கள், 941 மாணவிகள்

Update: 2020-03-03 16:52 GMT

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மொழி பாட கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வு எழுத வரவில்லை.   சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 820 மாணவர்கள், 941 மாணவிகள் என மொத்தம் 1,761 பேர் தேர்வு எழுதவில்லை.

மேலும், நேற்று நடைப்பெற்ற பொதுத் தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட  காரணத்தினால் 11 மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

மாணவர்களின் தேர்வை கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்படிருந்தனர். மேலும் தேர்வுகளின் போது, காப்பியடித்தல் மற்றும் வேறு ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள் என முன்னதாக தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வில் காப்பி அடித்தல் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தேர்வுத்துறை வெளியிட்டது. 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட அனைவருமே பழைய பாடத்திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் வேலூரில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள். 

newstm.in

Tags:    

Similar News