பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! 30 பேர் பலி!!
பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! 30 பேர் பலி!!
பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சையது விரைவு ரயில், மில்லத் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் சையது விரைவு ரயிலும் மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதின. இந்த பயங்கர விபத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகளும் தடம்புரண்டது தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் பயணத்தின்போது தடம் புரண்டதா அல்லது சதி செய்து சமூக விரோதிகளால் தகர்க்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இன்று காலை இரு ரயில் நிலையங்களில் இருந்தும் புறப்பட்ட ரயில்கள் பக்கவாட்டு தண்டவாளங்களில் பிரிந்துசெல்லும். ஆனால் ரயில் ஒரே தண்டவாளத்தில் வேகமாக சென்றப்போது ரயில் ஓட்டுநர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அருகில் சென்றதும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் செல்வதை உணர்ந்து நிறுத்தியப்போதும் வேகமாக சென்றதால் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.
newstm.in