ஒற்றைக்காலுடன் தினமும் 2 கி.மீ. தூரம் பள்ளி செல்லும் சிறுமி!!

ஒற்றைக்காலுடன் தினமும் 2 கி.மீ. தூரம் பள்ளி செல்லும் சிறுமி!!

Update: 2022-06-30 08:48 GMT

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், ஒற்றைக்காலிலேயே 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று பயின்று வருகிறார்.

பீகார் மாநிலம் சிவான் பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியன்சு குமாரிக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. பெற்றோரின் ஊக்கத்தால், ஒற்றைக்காலிலேயே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகி உள்ளார்.

11 வயதான பிரியன்சு குமாரிக்கு, மருத்துவராகி சேவை புரிவதே லட்சியம் என்கிறார். தனது உடற்குறையைப் போக்க பீகார் மாநில அரசும் மத்திய அரசும் உதவாததால், தினமும் 2 கிலோ மீட்டர் தூரத்தை ஒற்றைக்காலிலேயே கடந்து பள்ளி செல்கிறார்.


இதைத்தொடர்ந்து தனக்கு செயற்கைக்கால் வழங்குமாறு அரசாங்கத்திடம் பிரியன்சு குமாரி கோரிக்கை விடுத்துள்ளார். பிறந்ததிலிருந்தே தாம் இப்படித்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், அதற்காக கனவுகளை அடையாமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

கனவை நோக்கி நான் செல்ல, செயற்கை காலொன்று தேவைப்படுகின்றது, அதற்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே இதுபோன்று மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News