வருஷத்துக்கு 2 கல்யாணம்… தாத்தாவின் லீலை!!
வருஷத்துக்கு 2 கல்யாணம்… தாத்தாவின் லீலை!!
பல்வேறு மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபரை ஒடிசா போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர ஸ்வைன். 14 பெண்களை திருமணம் செய்துள்ள இவர் தற்போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
போலீசார் கூறுகையில், 1982-ல் இவர் முதன்முதலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் 2002-ல் இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முதல் 2 திருமணங்கள் வாயிலாக மட்டும் இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன்கள் இருவரும் மருத்துவர்கள் என காமேஷ் கூறியுள்ளார். மேலும், அவரது இரண்டாவது மனைவி ஒடிசாவில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் விசாரித்து வருகிறோம் என போலீசார் கூறுகின்றனர்.
அதன்பிறகு 2002 -ம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரையில், ரமேஷ் சந்திர ஸ்வைன், மேட்ரிமோனி வலைதளங்கள் மூலம் பெண்கள் தேடியுள்ளார். இவர் நடுத்தர வயது கொண்ட தனியாக வசிக்கும் பெண்களை மட்டுமே குறிவைத்திருக்கிறார்.
அதுவும் குறிப்பாக விவாகரத்தான பெண்களைக் குறிவைத்துள்ளார். இவர்களைப் பற்றிய தகவல்களை மேட்ரிமோனியல் இணையதளங்களில் சேகரிப்பார். பின்னர் அவர்களுடன் நட்பாகி, காதலிப்பதாக சொல்லி திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு பணம், பொருளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுவார்.
தன்னை மருத்துவர் என சொல்லிக் கொண்டே எல்லா பெண்களையும் அவர் அணுகியுள்ளார். இதுவரை டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள பெண்களை ஏமாற்றி 14 திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டுகள், 4 ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
newstm.in