2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. சிறையில் குற்றவாளி தற்கொலை..!
2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. சிறையில் குற்றவாளி தற்கொலை..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலெ போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபு (31). டிரைவரான இவர் வாடகை கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி உறவினர் ஒருவரின் 2 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, காரில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடினார்.
இதையடுத்து, அத்திபெலெ போலீசார் தீபுவை பிடித்து விசாரித்தபோது, குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற தீபு, போர்வையை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சிறைக்குள் சென்ற போலீசார், தீபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீபு தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.