அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. அச்சத்தில் மக்கள்..!

அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. அச்சத்தில் மக்கள்..!

Update: 2022-07-05 11:21 GMT

அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (4-ம் தேதி) முதல் இன்று (5-ம் தேதி) அதிகாலை வரை 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.57 மணி அளவில் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல், ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Similar News