அதிகளவில் புழக்கத்தில் வரத்தொடங்கிய 20 ரூபாய் காய்ன் !!

அதிகளவில் புழக்கத்தில் வரத்தொடங்கிய 20 ரூபாய் காய்ன் !!

Update: 2022-03-15 18:50 GMT

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது . அதனைத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நாணயத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என பல இடங்களில் குழப்பங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி செல்லும் என தெரிவித்தப்போதும் சில வியாபாரிகள் வாங்க மறுப்பதால் குழப்பம் நீடிக்கிறது. இதனையடுத்து மக்கள் தங்களிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், 20 ரூபாய் நாணயம் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட லாக்டவுனால் ஒரு ஆண்டு கழித்தே மக்களின் கைகளுக்கு சென்று சேர்ந்தது. அப்போதே மத்திய அரசு பார்வையற்றவர்களும் எளிதாக நாணயங்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் இந்த 20 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த 20 ரூபாய் நாணயம் காப்பர், சின்க், நிக்கலால் தயாரிக்கப்பட்டுள்ளது.  

இரண்டு நிறத்தில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. உள் வட்டத்தில் வெளிர் தங்க நிறத்தில் இருக்கும்படியும் வெளி வட்டத்தில் வெள்ளை நிறமும் இருக்கும்படியும் இந்த நாணயம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதோடு அசோக ஸ்தூபி இடம் பெற்றுள்ளது. 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு இடத்தில் இந்தியில் 'பாரத்' என்றும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

இதில் புதிய அம்சமாக, பார்வைக் குறைபாடு இருப்பவர்கள் எளிதில் இந்த நாணயத்தை அடையாளம் காணும்படி இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது.  


 

newstm.in
 

Tags:    

Similar News