சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது பெண்.. புகாரையடுத்து வழக்குப் பதிவு..!
சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது பெண்.. புகாரையடுத்து வழக்குப் பதிவு..!
மும்பை தாராவியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் 2020-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் சில நாட்கள் ஆன்லைனில் சாட்டிங் செய்தனர்.
பின்னர் அந்தப் பெண், சிறுவனிடம் அவரை காதலிப்பதாக ஆன்லைனில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த சிறுவன் அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதோடு, அந்தப் பெண்ணின் சமூக வலைதள கணக்கை அவர் பிளாக் செய்துவிட்டார். இதனால் அந்தப் பெண் வேறு ஒரு பெயரில் புரொஃபைல் உருவாக்கி, மீண்டும் அந்த சிறுவனுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், அந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி வேலை தேடி மும்பை வந்துள்ளார். இதை அறிந்த அந்தப் பெண், தனது வீட்டுக்கு வரும்படியும், தன் பெற்றோரை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை. இதையடுத்து அந்தப் பெண், சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பெண், “நான் விரும்புவதை செய்ய வேண்டும். இல்லையென்றால், உன் மீதும், உனது குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் செய்வேன்” என்று மிரட்டியுள்ளார்.
அதனால், சிறுவன் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், சிறுவனை மும்பையின் பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த சிறுவன், இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். உடனே அவன் பெற்றோர் பீகாரிலிருந்து மும்பை வந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணைச் சந்தித்து, தங்கள் மகனிடம் இருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் அந்தப் பெண், சிறுவன் மீதும் அவர் பெற்றோர் மீதும் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, உடனடியாக முன்ஜாமீன் பெற்ற சிறுவனின் குடும்பத்தார், தாராவி போலீசில் அந்தப் பெண் மீது புகார் அளித்தனர். அதையடுத்து, தாராவி போலீசார் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவனை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.