பட்டாசுக் கடையில் கஞ்சா.. ஆய்வில் அகப்பட்டது 200 கிலோ..!
பட்டாசுக் கடையில் கஞ்சா.. ஆய்வில் அகப்பட்டது 200 கிலோ..!
விருதுநகர் அருகே உள்ள கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பெயரில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
சந்தேகத்தின் அடிப்படையில், சிவகாசி செல்லும் சாலையில் கவலூர் என்ற இடத்தில் உள்ள ஜோதி பட்டாசுக் கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்தக் கடையில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த மதுரையைச் சேர்ந்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன், தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.