பள்ளியில் துப்பாக்கியுடன் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்.. பயங்கரவாத கும்பல் வெறிச்செயல் !!
பள்ளியில் துப்பாக்கியுடன் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்.. பயங்கரவாத கும்பல் வெறிச்செயல் !!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள், மாணவர்கள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பலால் கடத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களை நிறுத்தியும், பள்ளிக்குள் அதிரடியாக புகுந்தம் அக்கும்பல் இக்கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே பள்ளியில் 200 மாணவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பு கடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளிகூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கப்படும் இந்த பள்ளியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர். பின்னர் திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்கள் சரமாரியாக சுட்டனர். இதில்ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.
இதன்பின்னர் மர்ம நபர்கள், அங்கிருந்த ஏறக்குறைய 200 மாணவர்களை வாகனங்கள் வரவைத்து கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடியாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணைக்கு பின் நைஜர் நகர போலீஸ் அதிகாரி கூறுகையில், பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டனர் என உறுதிப்படுத்த வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.
நைஜீரியாவில் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் புகுந்து மாணவர்களை கடத்தி செல்வதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரசு விடுவித்து கொண்டு வருவதும் அதிகரித்து உள்ளது.
newstm.in