இந்த மாநிலத்தில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் ! அதிரடி அறிவிப்பு !!

இந்த மாநிலத்தில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் ! அதிரடி அறிவிப்பு !!

Update: 2021-06-28 18:46 GMT

டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சீக்கியர் ஒருவர்தான் அறிவிக்கப்படுவார் என ஏற்கனவே கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அப்படி தாங்கள் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளர் சீக்கியர்களுகு பெருமிதம் தரக் கூடியதாகவும் இருக்கும் என்றும் பொடிவைத்திருந்தார் கெஜ்ரிவால்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் வென்று ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். இது தொடர்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். டெல்லியில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதற்கு மிகப் பெரும் வரவேற்பு உள்ளது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பஞ்சாப் மாநில மக்கள் வழங்கினால், அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு அங்கு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் மாநிலம் செல்லவுள்ளார். அப்போது அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து தனது கட்சியின் அம்மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News