2021இன் சிறந்த படம் ஜெய் பீம் – புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!!
2021இன் சிறந்த படம் ஜெய் பீம் – புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!!
2021ஆம் ஆண்டின் சிறந்த படம் ஜெய் பீம் என நடிகை சாய் பல்லவி புகழ்ந்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஜெய் பீம் அமோக ஆதரவை உலகம் முழுவதும் பெற்றது.
இந்நிலையில் அப்படத்தை பிரபல நடிகை சாய் பல்லவி புகழ்ந்து தள்ளியுள்ளார். சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்தார்.
சாய் பல்லவி ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் கடந்த ஆண்டு கவனம் ஈர்த்த ‘சர்தார் உத்தம்’, ‘ஜெய் பீம்’ படங்களை பாராட்டியுள்ளார். சர்தார் உத்தம் என்னை நெகிழ வைத்தது. சில நேரங்களுக்கு உலுக்கி எடுத்தது.
உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காட்டுவார்கள் என்று நினைக்கவில்லை. அன்று முழுக்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காலத்தில் நடந்த அனைத்தையும் படத்தில் காட்டினார்கள் என புகழ்ந்துள்ளார்.
அதே போல் ஜெய் பீம் 2021 ஆம் ஆண்டின் சிறந்த படம் என்று பாராட்டியுள்ளார். ஏற்கனவே பலரும் ஜெய் பீம் படத்தை பாராட்டியுள்ள நிலையில், சாய் பல்லவியும் அதில் இணைந்துள்ளார்.
newstm.in