பாலியல் குற்றங்கள் 21% அதிகரிப்பு.. போலீஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

பாலியல் குற்றங்கள் 21% அதிகரிப்பு.. போலீஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

Update: 2022-02-25 18:08 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஊரடங்கு உத்தரவுகள், வருவாய் இழப்பு ஆகியவற்றால் நாடு பேரிடரை சந்தித்து வருகிறது.

எனினும், தலைநகர் டில்லியில் கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறும்போது,  “கடந்த 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 1,618 ஆக பதிவாகி இருந்தது. இது, கடந்த 2021-ம் ஆண்டில் 1,969 ஆக அதிகரித்து உள்ளது. இது, 21 சதவீதம் அதிகம் ஆகும்.

இதில், 98.78 சதவீதம் வரையிலான பாலியல் வன்முறை சம்பவங்கள் தெரிந்த நபர்களாலேயே நடந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டில் 8,800 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது, 17 சதவீதம் அதிகம் ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Similar News