நேற்று முழு ஊரடங்கால் ஒரே நாளில் ரூ.217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!!
நேற்று முழு ஊரடங்கால் ஒரே நாளில் ரூ.217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!!
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
முழு ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், ஒரு நாள் முன்னரே அதாவது சனிக்கிழமையே மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்தது.
அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ. 217.96 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.42.59 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.40.85 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.41.28 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.