மிஸ் இந்தியா பட்டத்தை தட்டி சென்ற 21 வயது இளம்பெண்.!!

மிஸ் இந்தியா பட்டத்தை தட்டி சென்ற 21 வயது இளம்பெண்.!!

Update: 2022-07-04 18:34 GMT

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஜூலை 3) VLCC மிஸ் இந்தியா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மேலும் இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி 2022 ஆண்டுக்கான "ஃபெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட்" பட்டத்தை தட்டி சென்றுள்ளார். தொடர்ந்து இரண்டாம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் என்பவரும், மூன்றாவது இடத்தை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் என்பவரும் பிடித்தனர். இதனை மிஸ் இந்தியா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை நேஹா தூபியா, டினோ மோர்யா, மலாய்கா அரோரா, டிசைனர்கள் ரோஹித் காந்தி, ராகுல் கானா, நடனக் கலைஞர்கள் ஷிமாகர் தாவர், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

இந்த மிஸ் இந்தியா போட்டி பகுதி ஆன்லைனிலும் பகுதி நேரடியாகவும் நடந்துள்ளது. நாடு முழுவதுமிருந்து 31 பேர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர். பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

அழகிகள் பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை இறுதிப் போட்டி நடந்தது. அதில் நடுவராக பங்கேற்ற முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் நேஹா தூபியா, இந்தப் போட்டி தனது இனிமையான நினைவுகளை மீட்டுக் கொடுத்தது என்று கூறினார்.


 

Similar News