கேளிக்கை விடுதியில் 22 இளைஞர்கள் மயங்கிவிழுந்து உயிரிழப்பு !!

கேளிக்கை விடுதியில் 22 இளைஞர்கள் மயங்கிவிழுந்து உயிரிழப்பு !!

Update: 2022-06-27 17:26 GMT

இரவுநேர மது விடுதியில் சிறுவர்கள் உட்பட 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  
தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெற்கு லண்டன் என்ற நகரம். இங்கு ஏராளமான இரவுநேர கேளிக்கை விடுதி, மது விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என பலரும் வந்துசெல்வதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் பார்ட்டிக்கு வந்துள்ளனர். அனைவரும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதிகாலை இந்த இரவு விடுதியில் பலர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இரவு விடுதிக்கு சீல் வைத்து உடல்களை கைப்பற்றினர்.

சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
 


விசாரணையில், உயிரிழந்தவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும் பிரேத பரிசோதனை முடிவில் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அந்த மாகாணத்தின் தலைவர் ஆஸ்கர் மபுயானே கூறுகையில், இதை நம்பவே முடியவில்லை. இந்த இளைஞர்கள் யாரும் நோய்வாய்பட்டவர்கள் இல்லை. இவர்கள் விடுமுறையை குடும்பத்துடன் ஆனந்தமாக கழிக்க வேண்டியவர்களே. இதுபோன்று உயிரை விட்டுள்ளது பெரும் கவலையை தருகிறது, என்றார்.

newstm.in
 

Similar News