தமிழக எம்.எல்.ஏ.க்கள் 234 பேரையும் கடத்துவோம்!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம் என சென்னை இன்ஸ்பெக்டருக்கு அல்-ஹக் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2020-03-03 20:54 GMT

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம் என சென்னை இன்ஸ்பெக்டருக்கு அல்-ஹக் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த 14-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.போராட்டக்குழு நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேசியும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

                                  

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு அல்-ஹக் என்ற பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது "வரும் ஏப்ரல் 1-ந்தேதி என்.பி.ஆர், என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தினால் எங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களையும் கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News