25 லட்சம் தரலேனா உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது - திமுக எம்எல்ஏக்களை மிரட்டிய தம்பதி..!!

25 லட்சம் தரலேனா உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது - திமுக எம்எல்ஏக்களை மிரட்டிய தம்பதி..!!

Update: 2022-01-29 06:45 GMT

திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரன். இவருக்கு கடந்த 25-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அப்போது பேசிய நபர், தாம் உள்துறை டிஎஸ்பியாக பணிபுரிவதாகவும், தொகுதி சம்பந்தமாக தங்கள் மீது புகார் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எம்எல்ஏ சந்திரன் என்ன பிரச்னை என்று கேட்டபோது, அவர் சரிவர பதில் தெரிவிக்காமல் ரூ. 25 லட்சம் தந்தால், தாம் பிரச்சினையை சரிசெய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இல்லையெனில், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதே போன்று விளாத்திகுளம் எம்எல்ஏவிடமும் அதேபோல் பேசியுள்ளார்.

கடந்த 27-ம் தேதி போன் செய்த நபர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே பணத்தை கொண்டு வந்து தர வேண்டும் என சந்திரன் எம்எல்ஏவை மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், ஓட்டல் அருகே காரில் வந்து பணத்தை பெற முயன்ற விஜயகுமார் மற்றும் அவரது மனைவி யசோதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News