விடைபெறுகின்றனர் 25,000 அரசு ஊழியர்கள்.. புதியவர்களுக்கு வாய்ப்பு..!
விடைபெறுகின்றனர் 25,000 அரசு ஊழியர்கள்.. புதியவர்களுக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில், தற்போது முதல் முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர்.
புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே, மாநில அரசின் துறைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் இன்னும் 2 மாதங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்பப்பட உள்ளது எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.