இன்று தமிழகம் முழுவதும் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம்!!

இன்று தமிழகம் முழுவதும் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம்!!

Update: 2022-03-19 08:42 GMT

தமிழகத்தில் இதுவரை 24 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 25ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் முகாம்கள் மூலம் இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

இதுவரையில் 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 பேர் உள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2ஆவது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை மையமாகக் கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் மட்டும் 10 லட்சத்து 60 ஆயிரத்து 411 பேர் 2ஆவது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்கள் மெகா சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News