27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!
27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!
தமிழகத்தில், 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, புக்யா சினேகபிரியா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் செய்தித்தாள் நிறுவன ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பண்டி கங்காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பள்ளிக்கரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையா, மதுரை மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக வனிதா, சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு 2 துணை ஆணையராக சக்திவேல், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஆரோக்கியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கீழ்பாக்கம் துணை ஆணையர் கோபி, சேலம் நகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா, திருச்சி நகர தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.