ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்... மிரண்டு போன போலீஸ்!! VIDEO
ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்... மிரண்டு போன போலீஸ்!! VIDEO
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேப்பூர் பகுதியில் அதிவேகமாக ஆட்டோ ஒன்று வந்தது. இதை கவனித்த போலீஸார் ஆட்டோவை மடக்கி நிறுத்தினர்.
பின்னர் ஆட்டோவில் இருந்தவர்களை வெளியே வருமாறு கூறினர். இதையடுத்து ஒவ்வொருவராக சிறியவர்கள் முதல் 27 பேர் ஆட்டோவில் இருந்து வெளியே வந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆட்டோவில் 6 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஆனால் எப்படி 27 பேர் பயணித்து வந்தனர் என புரியாமல் போலீஸார் திக்குமுக்காடி போனார்கள். இது குறித்து ஆட்டோவை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
In UP's Fatehpur, an auto rickshaw ferrying 27 commuters was stopped by the local police during a check. The auto was later seized. pic.twitter.com/hez49t9eJS
— Piyush Rai (@Benarasiyaa) July 11, 2022
இதில், அனைவரும் பக்ரீத் தொழுகையை முடித்து விட்டு வீட்டிற்கு ஒன்றாகத் திரும்பும் போது இவர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவில் இருந்து 27 பேரும் ஒவ்வொருவராக இறங்கி வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
newstm.in