27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

Update: 2022-06-10 05:40 GMT

தமிழ்நாடு காவல்துறையில் 26 காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கியும் பணியிடங்களை ஒதுக்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்பி ஒருவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பாக சென்னை காவல்துறையில் கொளத்தூர் காவல் மாவட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூருக்கு என்று தனியாக துணை ஆணையர் ஒருவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஎஸ்பியாக இருந்த ராஜாராம் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் துணை ஆணையராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, புக்யா சினேகப்ரியா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் செய்தித்தாள் நிறுவன ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பண்டிகங்காதரும், தாம்பரம் காவல் ஆணையர் அகத்தில் உள்ள பள்ளிகரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையாவும், மதுரை மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக வனிதாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு 2 துணை ஆணையராக சக்திவேல், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஆரோக்கியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி, சேலம் நகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா, திருச்சி நகர தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News