தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா!!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா!!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி ஒரே நாளில் 2,722 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
31,810 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,96,321 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 18,687 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,413 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 474 பேருக்கும், கோவையில் 131 பேருக்கும், திருவள்ளூரில் 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in