ஜிம்மில் உடற்பயிற்சியின் போது 27 வயது இளைஞர் மரணம்!!
ஜிம்மில் உடற்பயிற்சியின் போது 27 வயது இளைஞர் மரணம்!!
மதுரையில் இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 2ஆவது மெயின் ரோட்டை சேர்ந்த விஷ்ணு(27) என்ற இளைஞர் மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபருக்கு 27 வயதே என்பதால், இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in