28 வயது இளம்பெண் மீது போக்சோவில் வழக்குப்பதிவு!!

28 வயது இளம்பெண் மீது போக்சோவில் வழக்குப்பதிவு!!

Update: 2022-04-20 07:42 GMT

கோவையில் 28 வயது பெண் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்தது.

இதனையடுத்து, இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தைக்கு நடத்தினர். அதன்பின்னர், உமா ரஞ்சனியும், ரமேஷும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் உமா ரஞ்சனி ஆத்திரத்தில் ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து ஆபாசமாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உமா ரஞ்சினி மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News