இனி 2 ஜிபி ஷேரிங்... 512 குரூப்.. தெறிக்கவிடும் புது வாட்ஸ் ஆப் அப்டேட்..!!

இனி 2 ஜிபி ஷேரிங்... 512 குரூப்.. தெறிக்கவிடும் புது வாட்ஸ் ஆப் அப்டேட்..!!;

Update: 2022-06-11 05:00 GMT

2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து புதுப்புது அப்டேட் தொடர்பான பல தகவல்களை வாட்ஸ் அப் அறிவித்து வருகிறது. ஒவ்வொரு அப்டேட்டும் சோதனை  முறையில் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகும். 

இந்நிலையில், பல மாத சோதனைக்குப் பிறகு, வாட்ஸ்அப் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றையும் பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாய்ஸ் காலில் ஒரே நேரத்தில் 32  பேர் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்துள்ளது.மேலும் வாட்ஸ்அப் குரூப்பில் 512 பேர் சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாட்டில் 100 எம்பி வரையிலான கோப்புகள் மட்டுமே பகிர முடியும் என்று இருந்த நிலையில் வாட்ஸ்அப் அதை 2ஜிபி ஆக உயர்த்தியது. இதன்மூலம் பயனர்கள் 2 ஜிபி வரையிலான கோப்புகளை வாட்ஸ்அப்பில் பகிர முடியும்.

வாட்ஸ்அப் வழங்கும் இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சோதிக்க, வாட்ஸ்அப் ஓபன் செய்து திரையின் மேல் வலது புறத்தில் காட்டப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் நியூ குரூப் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் காட்டப்படும் ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணை கிளிக் செய்தால், மேலே எத்தனை பங்கேற்பாளர்கள் வரை இணைக்கலாம் என்ற எண்ணிக்கை காட்டப்படும். 

இதன்மூலம் இந்த அப்டேட் கிடைக்கிறதா என்பதை சரி பார்க்கலாம்.

Tags:    

Similar News