ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2ஆவது நாளாக ரெய்டு!!

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2ஆவது நாளாக ரெய்டு!!

Update: 2022-06-08 08:16 GMT

ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 86 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 65 கிளைகள் இருக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பல மணிநேரம் இந்த சோதனை நீடித்தது.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சில மருத்துவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்தில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது.

சென்னையில் 13 மையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் அதிகளவு ஸ்கேன்கள் மற்றும் சோதனைகள் செய்ததில் வரி ஏய்ப்பு உள்ளதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

newstm.in 

Similar News