பிரபல நடிகையை அடித்து துன்புறுத்தும் 2ஆவது கணவர்! இணை கமிஷனரிடம் மீண்டும் புகார்!

பிரபல நடிகையை அடித்து துன்புறுத்தும் 2ஆவது கணவர்! இணை கமிஷனரிடம் மீண்டும் புகார்!

Update: 2021-07-03 08:44 GMT

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த நடிகை ராதா (39)  சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் நடிகை ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஆனால் வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் ஆர்.ஏ.புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் வசந்தராஜாவும் நடிகை ராதாவும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. 

நடிகை ராதாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த ஏப்ரல் மாதமே இந்த புகாரை அவர் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகை ராதா தற்போது, பரங்கிமலையில் உள்ள சென்னை தெற்கு இணை கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் மற்றொரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி எனது கணவரும், போலீஸ் எஸ்.ஐ.யுமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் எஸ்ஐ பாரதி, காவலர் இளம்பரிதி ஆகியோர் புகாரை திரும்பப்பெற்று, கணவருடன் சமாதானமாக போவதாக எழுதித்தரும்படி வற்புறுத்தினார். 

ஆனால் நான் மறுத்துவிட்டேன். வசந்தராஜாவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.ஐ மறறும் வசந்தராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

newstm.in
 

Tags:    

Similar News