2ஆவது டி20: இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு.. தொடரும் நியூசிலாந்து அணியின் சோகம் !!

2ஆவது டி20: இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு.. தொடரும் நியூசிலாந்து அணியின் சோகம் !!

Update: 2021-11-19 21:30 GMT

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டார். 

நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கி வைத்தார் மார்ட்டின் கப்தில். இதன் தொடக்கத்தில் இருந்தே இரு வீரர்களும் அதிரடி காட்டினர்.

இதனால் ரன்ரேட் எகிறும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் தீபக் சாஹர் வீசிய ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய கப்தில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் குவித்தது. அதன்பின்னரும் அதிரடி காட்டினர். அடுத்து வந்த சாப்மேன் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்துதான் பெறும் சறுக்கல் தொடங்கியது நியூசிலாந்து அணிக்கு. கிளென் பிலிப்ஸ் மட்டும் 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ரன் சேர்க்கவே தடுமாறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இந்திய அணியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

புவனேஷ்வர் (39 ரன்), தீபக் சாஹர் (42 ரன்), அக்சார் பட்டேல் (26 ரன்), அஸ்வின் (19 ரன்) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 

newstm.in

Tags:    

Similar News