கொரோனா தொற்றின் 2ஆம் அலை.. மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.. ப.சி குற்றச்சாட்டு !

கொரோனா தொற்றின் 2ஆம் அலை.. மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.. ப.சி குற்றச்சாட்டு !

Update: 2021-04-05 08:17 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா ஒருநாள் பாதிப்பில் மீண்டும் உலக அளவில் இந்தியாவில் வேகமாக உயர்ந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறித்து ப.சிதம்பரம்  விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது. கொரோனா தொற்று பரவலை 21 நாட்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை.

தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை. தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது.

தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது, என அவர் இதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  


newstm.in

Tags:    

Similar News