தண்ணீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் உயிரிழப்பு!!
தண்ணீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் உயிரிழப்பு!!
பழனி அருகே வரதமாநதி அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ் என்பவரது இரட்டை மகன்களான விக்னேஷ்(23), யோகேஷ்(23). அவர்களின் நண்பர்களான திருவேற்காட்டை சேர்ந்த ஹரீஷ்(23) மற்றும் காரைக்காலை சேர்ந்த கணேஷ்(21) சபரிமலைக்கு சென்றனர்.
4 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு ரயில் மூலம் சென்று, அதிகாலை பழனிஅருகே உள்ள வரதமாநதி அணையை சுற்றிப்பார்க்க சென்றனர். பின்னர், அங்குள்ள அணை பகுதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற மற்றவர்கள் முயன்றபோது மேலும் இருவர் தண்ணீரில் மூழ்கினர். சுதாரித்துக்கொண்ட ஹரிஷ் என்பவர், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அணையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சகோதரர்கள் விக்னேஷ்,யோகேஷ் மற்றும் காரைக்காலை சேர்ந்த கணேஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
போலீசார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in