பொதுமக்களுக்கு 3 நாள் தடை.. அரசு அதிரடி உத்தரவு..!

பொதுமக்களுக்கு 3 நாள் தடை.. அரசு அதிரடி உத்தரவு..!

Update: 2021-12-17 18:01 GMT

ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை 3 நாட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது. புத்தாண்டு வர இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில பெரிய மாநகரங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அரசிற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Similar News