குடும்பத்திற்கு 3 இலவச சிலிண்டர்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

குடும்பத்திற்கு 3 இலவச சிலிண்டர்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-04-01 17:03 GMT

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பிரமோத் சாவந்த் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார்.


அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையில், நாங்கள் அட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம்.

தற்போது அதை நிறைவேற்றும் விதமாக, வரும் புதிய நிதியாண்டு முதல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 இலவச எரிவாயு சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News