மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி.. தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி.. தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
விழுப்புரத்தில், மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “நேற்று இரவு சுமார் 9.45 மணி அளவில் விழுப்புரம் மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (45), வெங்கடேஷ் (44) மற்றும் அவருடைய மகன் சுப்பிரமணி (40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.