செல்ஃபி மோகத்தால் 3 இளம் பெண்களின் உயிரைப் பறித்தது..!

செல்ஃபி மோகத்தால் 3 இளம் பெண்களின் உயிரைப் பறித்தது..!

Update: 2021-07-06 11:18 GMT

தெலுங்கானா மாநிலத்தில், ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம், நிர்மல்மாவட்டம், தானூரு கிராமத்தைச் சேர்ந்த அஸ்மதா (15), இவருடைய தங்கை வைஷாலி (13), இவர்களின் உறவினர் அஞ்சலி (15) ஆகிய மூவரும் தங்கள் பாட்டி மங்கபாயுடன் விவசாயப் பணிக்குச் சென்றனர்.

வெயில் அதிகமாக இருந்ததால், பேத்திகள் மூவரையும் வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு மங்கபாய் மட்டும் விவசாயப் பணியில் ஈடுபட்டார். இளம்பெண்கள் மூவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் சிங்கன்காவ் எனும் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, மூவரும் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

பணி முடிந்து வீடு திரும்பிய மங்கபாய், வீட்டில் பேத்திகள் இல்லாததைக் கண்டு பல இடங்களிலும் தேடினார். இறுதியில், அவர்களை ஆற்றங்கரையில் பார்த்ததாக ஒருவர் கூறினார்.

மங்கபாய் ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தபோது, 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தானூரு போலீஸார் அங்கு விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் மூவரின் உடல்களையும் மீட்டனர்.

Tags:    

Similar News