மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-07-02 05:50 GMT

பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக, ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரான பகவந்த் மான் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “முந்தைய அரசுகளும் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும்.


ஆனால், எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை இன்று நிறைவேற்றப் போகிறோம்.

அதன்படி, இன்று (1-ம் தேதி) முதல், பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News