திருமண ஆசை காட்டி 300 பெண்களிடம் மோசடி!!

திருமண ஆசை காட்டி 300 பெண்களிடம் மோசடி!!

Update: 2022-05-28 16:46 GMT

இளைஞர் ஒருவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த கருபா கலும்ஜே என்பவர் 2019ஆம் தொழில்முறை பயணமாக இந்தியா வந்தார். பின்னர் அவர் தன்னை வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கூறி திருமண இணையதளத்தில் விளம்பரப்படுத்தினார்.

தனது பெயர் சஞ்சய் சிங் எனவும் தான் கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனவும் கூறியுள்ளார். தனக்கு நல்ல மணப்பெண் தேடுவதாகக் கூறி பல பெண்களிடம் போலியாக பேசி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.

இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இதற்காக ஸ்மார்ட்டாக தெரியும் இந்திய ஆண்களின் பல புகைப்படங்களை ப்ரோபைல் பிக்சராக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் மீது முதன்முதலாக உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல்துறை, கருபாவை கைது செய்தது.

அவர் விசா காலத்தை மீறி இவர் இந்தியாவில் தங்கியுள்ளார். இவரிடம் இருந்து ஏழு செல்போன்கள், பேங்க் ஆப் தாய்லாந்து, பேங்க் ஆப் துபாய், இன்டர்போல், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க உளவுத்துறை ஆகியவற்றின் பேரில் தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

newstm.in

Similar News