பொங்கல் பரிசாக 3000 ரூபாய்.. தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்..!
பொங்கல் பரிசாக 3000 ரூபாய்.. தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை முதல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோரை 15 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.