வேலூரில் 3000 ஆண்டுகள் பழமையான மரகதலிங்கம்
மூங்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே இருக்கும் பழமையான கட்டடத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர். இதற்காக பழைய கோயிலின் கருவறையை தோண்டியபோது 3 ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 400 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி பகுதியில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மூங்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே இருக்கும் பழமையான கட்டடத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர். இதற்காக பழைய கோயிலின் கருவறையை தோண்டியபோது 3 ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 400 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மரகத சிவலிங்கத்தை தற்காலிக பீடத்தின் மீது வைத்து சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் சுற்றுவட்டாரப்பகுதி மக்களும் மரகத லிங்கத்தை காணவந்தனர். மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்ட கருவறையை சுற்றி அரசர்கள் கையில் வாள் வைத்திருப்பது, வேட்டைக்கு செல்வது போன்ற சிற்பங்கள் அடங்கிய சுற்று சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இவ்வளவு பழமையான லிங்கம் அமைந்துள்ள இடத்தை சுற்றிய பகுதிகள் மற்றும் கிராமங்களின் பெரும்பாலான இடங்கள் பழமையான கோயில்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. எனவே தொல்லியல் அகழ்வாராய்ச்சி செய்தால் பழங்கால நாகரிகம் வெளிவர வாய்ப்புள்ளது என்று வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
newstm.in