தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!!

தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!!

Update: 2022-05-29 07:00 GMT

கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என தெரிவித்ததை அடுத்து சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் சிக்கி கொண்டனர்.

அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள். ஆனால் கூட்ட நெரிசல் ஏற்படும்போது, உணவு வழங்குவது தொடங்கக்கூட இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதவு மூடப்பட்டு இருந்த போதிலும், பலரும் கட்டுக்கடங்காமல் புகுந்தனர்.

அந்த நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Similar News